மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டுள்ளார். 77 வயதான பகத் சிங் கோஷ்யாரி உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளராக இருந்து பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்ககது. கட்சியில், 75 வயதை கடந்தவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட மாட்டாது’ என்பது, ஏற்கனவே அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது.இதை காரணமாக வைத்துத் தான், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது.🌐