மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். முக்கிய நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது. ரயில், விமானம், பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்து போயுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் இன்று ( ஜூலை 2-ம் தேதி) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
@ மகா.,மழைக்கு பலி- 40 இன்னும் மழை பெய்யுமாம்