மதுவுக்கு எதிராக பேராடி வரும் வழக்கறிஞர் நந்தினி-குணா திருமணம்: எளிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.

மதுவுக்கு எதிராக பேராடி வரும் வழக்கறிஞர் நந்தினி-குணா திருமணம்: எளிய முறையில் சிறப்பாக நடைபெற்றது. நந்தினியின் கைதுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து நேற்று நந்தினி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கும் அவரது காதலர் குணா ஜோதிபாசுவுக்கும் இன்று கல்யாணம் நடைபெற்றுள்ளது. கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு எளிய முறையில் இருவரும் கல்யாணம் செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் திருமண உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதில், இன்று இல்லற வாழ்வில் இணையும் நாங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் இணைபிரியாது ஒற்றுமையுடன் வாழ்வோம் என்றும், இல்வாழ்க்கையிலும், சமுதாய வாழ்விலும் இணைந்து செயல்படுவோம் என்றும் உறுதியேற்று கொள்கிறோம், என்று தம்பதி இருவரும் கூட்டாக சொன்னார்கள்.🌐