மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அதற்கு கீழே இருந்த இருபது வீடுகள் அடியோடு மண்ணில் புதைந்து விட்டன.

கடந்த வியாழக்கிழமையன்று, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கவலப்பரா எனும் கிராமத்திலுள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அதற்கு கீழே இருந்த இருபது வீடுகள் அடியோடு மண்ணில் புதைந்து விட்டன. “குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதையும், தூங்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்களை யாராலும் பிரித்துவிட முடியாத அளவுக்கு சேர்ந்திருந்தனர். அவர்கள் நிலச்சரிவிலிருந்து சடலமாக மீட்கப்படும்போதும் இணைந்தே இருந்தனர். எனவே, அவர்களை ஒன்றாகவே சேர்த்து புதைப்பதற்கு அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்” – அலீனா, அனகா எனும் சிறுமிகளின் குடும்பத்து நண்பரான ஷிஜு மாத்யூ
@ கண்ணீர் வரவைக்கும் அண்டை மாநில வெள்ள சேத கதை!