மழைநீரை கண்மாய்களில் சேமித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றன.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி, மானாவாரி நிலங்கள் அதிகம் உடையது. சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத் தின் வழியாக, இப்பகுதிக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை, தண்ணீர் வினியோகிக்கப் படுகிறது.விளாத்திகுளம் பகுதியில் உள்ள, சில கிராமங்கள், பருவ மழையால் கிடைக்கும் மழைநீரை, கண்மாய்களில் சேமித்து, ஆண்டு முழுவதும், குடிநீராக பயன்படுத்தி வருகின்றன. மழைநீர் சேகரிப்பின் வழியாக, கோடையை யும், தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டையும், அக்கிராமங்கள் ஜெயித்துக் காட்டி உள்ளன. இந்த கிராமத்தை மாதிரி கிராமமாக கொள்ளலாம்!