மிட்நைட் பிளாக் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 மிரர் பிளாக், மிட்நைட் பிளாக், சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன், மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் உள்ளிட்ட வேரியன்ட்கள் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என இருவித மெமரிக்களில் வெளியிடப்பட்டது. இதன் மார்வெல் அவெஞ்சர்ஸ் எடிஷன் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்டிருந்தது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட மிட்நைட் பிளாக் வெர்ஷன் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேரியன்ட்-க்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் 256 ஜிபி வேரியன்ட் அதிக வரவேற்பை பெற்று வருவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் ஒன்பிளஸ் 6 விற்பனை பத்து லட்சத்துக்கும் அதிக யூனிட்களை கடந்திருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கிறது.

அதன் படி புதிய ஒன்பிளஸ் 6 வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி மற்றும் அதிகபட்சம் ரூ.1500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.2000 கேஷ்பேக் மற்றும் பிரபல வங்கிகளின் வட்டியில்லா மாத தவனை முறை வசதி மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.1500 வரை தள்ளுபடி பெற முடியும். அமேசான் வழங்கும் ஒன்பிளஸ் ரெஃபரல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி வழங்கப்படுகிறது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் OxygenOS 5.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் இயங்குகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 1080×2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.28 இன்ச் முழு எச்டி+ முழு ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைந்து 2.8GHz அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் f/1.7 அபெர்ச்சர், OIS, EIS, டூயல் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் சோனி IMX371 சென்சார், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC, USB OTG, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 155.70×75.40×7.75mm நடவடிக்கைகள் மற்றும் 177 கிராம் எடையுடையது. இந்த மிர்ரர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் சில்க் வைட் ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.

Leave a comment

Your email address will not be published.