மின்னணு குடும்ப அட்டைகளில் பிழை திருத்தங்கள் செய்து வழங்கும் திட்டம்
📌மின்னணு குடும்ப அட்டைகளில் பிழை திருத்தங்கள் செய்து வழங்கும் திட்டத்தை 5 குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
📌ஏற்கனவே நடைமுறையில் இருந்த காகித குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
📌மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் துறை அலுவலர்களின் கள ஆய்வுக்குப் பின் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
📌இந்நிலையில் மைய அளவில் மின்னணு அட்டைகள் அச்சிட்டு வழங்குவதில் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் மாவட்ட அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
📌திருத்தம் செய்யப்பட்ட அட்டைகளை மாவட்ட அளவில் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சென்னையில் உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் 20 ரூபாய் கட்டணத்தில் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
📌திருத்தப்பட்ட மின்னணு அட்டைகளை 5 பேருக்கு வழங்கி முதலமைச்சர் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.🌐