மியூசிக் சப்போர்ட் கொண்ட கார்மின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

புதுடெல்லி:
கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 500 பாடல்களை பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும்.
விவோஆக்டிவ் 3 அறிமுகம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட ஃபிட்னஸ் அம்சம், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் உள்ளிட்டவை புதிய சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
 

 
கார்மின் விவோஆக்டிவ் 3 சிறப்பம்சங்கள்:
– 1.2 இன்ச் 240×240 பிக்சல் ஃபுல்-கலர் கார்மின் க்ரோமா டிஸ்ப்ளே
– வாட்டர் ரெசிஸ்டன்ட் (5 ATM)
– ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் வசதி
– ஸ்டெப் கவுன்ட்டர், மூவ் பார்
– ஆட்டோ கோல்
– ஸ்லீப் மானிட்டரிங், கலோரி உள்ளிட்ட உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி
– மியூசிக் ஸ்டோரேஜ்: அதிகபட்சம் 500 பாடல்களை பதிவு செய்யும் வசதி
– பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் ஸ்போர்ட் செயலிகள்
ஸ்மார்ட்வாட்ச் மோடில் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குவதோடு, ஜிபிஎஸ் மற்றும் மியூசிக் மோடில் 5 மணி நேர பேக்கப், மியூசிக் இல்லாமல் ஜிபிஎஸ் மோடில் 13 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோஆக்டிவ் 3 மியூசிக் பிளாக் சிலிகான் 20மில்லிமீட்டர் பேன்ட் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் இந்த சாதனம் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 299.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,265) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.