முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து மோதல்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இந்நிலையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் இன்று நாட்டிங்காம் நகரில் நடைபெறுகிறது. டி 20 தொடரில் சதம் விளாசிய ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீண்டும் மிரட்ட காத்திருக்கின்றனர்.

கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டித் தொடரிலும் 4-வது வீரராக களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பார்முடன் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது.

டி 20 தொடரில் கடைசி இரு ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்படத் தவறிய ஷிகர் தவண் மீண்டும் பார்முக்கு திரும்ப முயற்சிக்கக்கூடும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமாருடன், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் பலம் சேர்க்கக்கூடும்.

டி 20 தொடரை இழந்துள்ள இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டித் தொடரில் பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இன்றைய போட்டி நடைபெறும் மைதானத்தில் தான் இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருந்தது. இதனால் அந்த அணி மீண்டும் ஒரு முறை மிரட்டக்கூடும். ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவால் அளிக்கக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் லயிம் பிளங்கெட், ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட், அடில் ரஷித், மொயின் அலி ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆயத்தமாகி உள்ள னர்.

Leave a comment

Your email address will not be published.