முதல் நாளிலேயே அதிரடி வசூல் செய்த தமிழ்ப்படம் 2- சிவா கலக்குராறே

சிவா நடிப்பில் அமுதன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் தமிழ் படம்-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இப்படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது, இந்நிலையில் தமிழ் படம்-2 தமிழகத்தில் இந்த வருடத்திலேயே முதல் நாளில் 3வது அதிக வசூலாம்.

எப்படியும் இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 6 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும், இந்த வருடத்தில் அதிக வசூல் காலா தான், அதற்கு அடுத்த இடத்தில் தானா சேர்ந்த கூட்டம், அவெஞ்சர்ஸ்-3 உள்ளது.

இதில் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இணையான வசூலை தமிழ் படம்-2 பெற்றுள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a comment

Your email address will not be published.