மு.க.ஸ்டாலின் சாமி கும்பிடுவது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மு.க.ஸ்டாலின் சாமி கும்பிடுவது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் படம் பற்றிய உண்மைத்தன்மை என்ன ? மு.க.ஸ்டாலின் மாரியம்மனின் படத்தை வணங்குவது போன்ற புகைப்படமானது, மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான கடந்த ஜூன் 3-ம் தேதியன்று, அவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தும் படமாகும். கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் அந்தப் புகைப்படத்தை ஸ்டாலின் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.. சிலர் அதை எடுத்து, கருணாநிதி படத்திற்குப் பதில் அம்மன் படத்தை வைத்து மார்ஃபிங் செய்து, சமூக வலைதளங்களில் பரப்பியிருப்பது தெரியவந்துள்ளது.🌐