மெக்சிகோ தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் ஆண்ட்ரஸ் மானுவேல் வெற்றி

மெக்சிகோ அதிபர் தேர்தலில் 64 வயதான இதுசாரி வேட்பாளரான ஆண்டரஸ் மானுவேல் வெற்றி பெற்றிருக்கிறார்.

மெக்சிகோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 53% வாக்குகள் பெற்று தேசிய மறுமலர்ச்சி இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஆண்ட்ரஸுக்கு கடும் போட்டியாகக் கருதப்பட்ட ரெகார்டோ அனயாவின் கட்சி 22% சதவீத வாக்குகளையும்,  ஆளும் கட்சியான புரட்சிகர கட்சி 16 சதவீத வாக்குகளையும் பெற்றது. தலைவர்கள் பலரும் ஆண்ட்ரஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆண்ட்ரஸ் பேசும்போது, “நான் நேர்மையுடனும், நியாயத்தோடும் ஆட்சி செய்வேன். நான் உங்களை  ஏமாற்றமாட்டேன். நான் மக்களை ஏமாற்ற மாட்டேன்” என்றார்.

தலைவர்கள் பலரும் ஆண்ட்ரஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டரஸ் மானுவேலின் பேச்சை கேட்க காத்திருக்கும் மக்கள்

ட்ரம்ப் வாழ்த்துஅதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்ட்ரஸ் மானுவேலுக்கு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில்”மெக்சிகோவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.  உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன். அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நன்மை பயக்கும் வகையில் செய்ய வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக  ஆண்ட்ரஸ் மானுவேல் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்றம், முஸ்லிம் நாடுகள் மீதான தடை ஆகிய நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.