நண்பர்களுடன் குளித்தபோது மெரினாவில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
வடபழனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (14). கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷன் (14). 2 பேரும் கோடம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் உட்பட 6 நண்பர்கள் மெரினாவுக்கு காலை 11.30 மணி அளவில் சென்று சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறக் கடற்பரப்பில் குளித்தனர். நீருக்குள் தொட்டுப்பிடித்து விளையாடியபோது எழுந்த ராட்சத அலை சந்தோஷ் மற்றும் பிரியதர்ஷனை உள்ளே இழுத்துச் சென்றது.

இதைக் கண்டு சக நண்பர்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இதுகுறித்து அண்ணா சதுக் கம் காவல் நிலையத்துக்கும் சென்று புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் அலைக் கழித்ததால், ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையம் சென்று வாக்குவாதம் செய்தனர்.
மாணவர்கள் நீரில் மூழ்கிய பகுதி மெரினா போலீஸாரின் எல்லைக்கு உட்பட்டது என்பதால் புகாரை மெரினா காவல் நிலையத்தில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மெரினா போலீ ஸார் வழக்குப் பதிந்து மாணவர்களைத் தேடி வருகின்றனர்.