மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்

புதுடெல்லி: ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பிரவுசரில் ‘api.whatsapp.com/send?phone= என டைப் செய்து பின்னர், தொலைபேசி எண்ணை டைப் செய்வதன் மூலம் எண்ணை சேமிக்காமலேயே செய்தி அனுப்ப முடியும். இதேபோன்று வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை மீண்டும் பதிவறக்கம் செய்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் அப் செயலிலேயே காண்பதற்கான வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐ-போன் செயலியில் மட்டுமே இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஐ-போன் பயனாளர்களுக்கான புதிய வசதியாக வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனின் கேலரியிலிருந்து மறைக்கவும் முடியும். இதுமட்டுமல்லாது, இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

Leave a comment

Your email address will not be published.