மலையாள சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மோகன்லாலை அழைக்கக்கூடாது என தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 107 பேர் முதல்வர் பினராயி விஜயனுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் மோகன்லால். மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான `அம்மா’ வின் தலைவராகவும் மோகன்லால் இருக்கிறார். இந்த நிலையில், விரைவில் நடக்க இருக்கும் மலையாள சினிமா விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்துகொள்வதாக தகவல் வெளியானது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமைதாங்கி விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மோகன்லாலை அழைக்கக்கூடாது என தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள், சினிமா செய்தியாளர்கள் உள்ளிட 107 பேர் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மனு அளித்துள்ளனர்.