தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து இறக்கிவிட்டதன் 125-வது ஆண்டை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் மீண்டும் வெளியிடப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி வழக்கறிஞராகப் பணியாற்றினார். அப்போது கடந்த 1893-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ரயிலில் பயணம் செல்ல முதல் வகுப்பில் முன்பதிவு செய்திருந்தார். அந்த பெட்டியில் வெள்ளையர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறி, காந்தியை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.

அதன்பிறகுதான் பிரிட்டிஷாரின் இனவெறியை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தை தென் ஆப்பிரிக்காவிலும், பின்னர் இந்தியாவிலும் தீவிர மாக நடத்தினார். பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் காந்தியை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட 125-வது ஆண்டை முன்னிட்டு, இங்கு 3 நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
முதல் நாளான நேற்று காந்தி யின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘மேக்கிங் ஆப் ஏ மகாத்மா’ என்று திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை கடந்த 1996-ம் ஆண்டு இந்தியா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து தயாரித்தன. படத்தை ஷியாம் பெனகல் இயக்கி இருந்தார். அந்தப் படம் நேற்று பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகரில் உள்ள அவ்லான் குரூப்புக்கு சொந்தமான திரையரங்கில் மீண்டும் வெளியிடப் பட்டது. பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகர் ஹாலில் தலைவர்கள் உரையாற்றும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.