Home செய்திகள் உலகச் செய்திகள் ரஷ்யாவில் ரகசிய ‘தரையடி நகரம்’ கண்டுபிடிப்பு!

ரஷ்யாவில் ரகசிய ‘தரையடி நகரம்’ கண்டுபிடிப்பு!

162
உலகச் செய்திகள் – மதன்.

ரஷ்யாவில் ரகசிய ‘தரையடி நகரம்’ கண்டுபிடிப்பு! கீழே ரகசியமாக வாழ்ந்த 200 பேர் கைது!!இந்த குட்டி நகரம், மாஸ்கோவின் செர்க்கிசோவ்ஸ்கி மார்க்கெட்டுக்கு கீழே பல ஆண்டுகளாக இயங்கி வந்திருப்பது தெரியவந்துள்ளது. ட்டவிரோத குடியேற்றவாசிகள் இந்த நகரத்தில் தங்கியிருந்து, அங்கேயே தையல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். செர்க்கிசோவ்ஸ்கி மார்க்கெட் ஆடை விற்பனை மற்றும் தையல் வேலைகள் அதிகம் நடைபெற்ற இடம். சீனாவில் இருந்து வந்த குடியேற்றவாசிகளே அநேக கடைகளை வைத்திருந்தனர்.தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தங்கியிருக்க சிறிய சிறிய அறைகள் பல அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு சிறிய உணவகம், சினிமா தியேட்டர், கேசினோ என பொழுதுபோக்கு அம்சங்களும் தரையடியே இருப்பதை, ரஷ்ய டி.வி. சேனல் இன்று ஒளிபரப்பியது.இந்த தரையடி நகரத்துக்கு, மின்சார இணைப்புகளும் மேலேயிருந்து கொடுக்கப்பட்டிருந்தன.
## அடப்பாவிகளா? மார்க்கெட்டுக்கு கீழே பல ஆண்டுகளாக குட்டி நகரமே இருந்திருக்கு!!🌐