ராய்ப்பூர் எய்ம்சில் 30 இடங்கள்

ராய்ப்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள Personal Assistant உள்ளிட்ட 30 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Personal Assistant:

1 இடம் (பொது).

தகுதி:

இளநிலை பட்டம் பெற்று நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் வீதம் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்று சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 40 நிமிடங்களுக்குள்ளும் அல்லது இந்தியில் 55 நிமிடங்களுக்குள்ளும் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 முதல் 30க்குள்

சம்பளம்:

ரூ.9,300-34,800.

2. Librarian Grade III:

1 இடம் (பொது).

தகுதி:

Library Science/Library and Information Service பாடத்தில் இளநிலை பட்டம் அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்று நூலக அறிவியல் பாடத்தில் இளநிலைப்பட்டம்/முதுநிலை டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம்.

வயது வரம்பு:

21 முதல் 30க்குள்

சம்பளம்:

ரூ.9,300-34,800.

3. Technical Assistant/Technician:

1 இடம் (பொது).

தகுதி:

Medical Lab Technology/OT Techniques பாடத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் அல்லது மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்து 8 வருட பணி அனுபவம் அல்லது அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்சசியுடன் OT Technology ல் டிப்ளமோ முடித்து 8 வருட பணி அனுபவம்.

வயது வரம்பு:

25 முதல் 35க்குள்.

சம்பளம்:

ரூ.9,300-34,800.

4. Storekeeper:

2 இடங்கள் (பொது).

தகுதி:

இளநிலை பட்டம் பெற்று Material Management பாடத்தில் முதுநிலைப்பட்டம்/டிப்ளமோ அல்லது Material Management பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.

வயது:

18 முதல் 35க்குள்.

சம்பளம்:

ரூ.9,300-34,800.

5. Warden (Hostel Warden): 

2 இடங்கள் (பொது) (ஆண்-1, பெண்-1).

தகுதி:

இளநிலைப் பட்டம் பெற்று House Keeping/Material Management/Public Relations/Estate Management பாடத்தில் டிப்ளமோ/சான்றிதழ் பயிற்சி முடித்து 2 வருட பணி அனுபவம்.

வயது வரம்பு:

30 முதல் 45க்குள்.

சம்பளம்:

ரூ.9,300-34,800.

6. Cashier:

1 இடம் (பொது).

தகுதி:

Commerce பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.

வயது:

21 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

7. Upper Division Clerk: 

4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1).

தகுதி:

இளநிலைப் பட்டம் பெற்று கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது:

21 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

8. Library Attendant Grade II:

1 இடம் (பொது).

தகுதி:

Library Science/Library and Information Service பாடத்தில் டிப்ளமோ/சான்றிதழ் பயிற்சி.

வயது:

21 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

9. Lan Technician:

8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1).

தகுதி:

அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி பாடத்தில் டிப்ளமோ.

வயது:

21 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

10. Lab Attemdamt Grade II:

8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1).

தகுதி:

அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Medical Lab Technology பாடத்தில் டிப்ளமோ.

வயது வரம்பு: 

18 முதல் 27க்குள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

11. Stenographer:

1 இடம் (பொது).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும் அல்லது இந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 27க்குள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

நேர்முகத்ததேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.aiimsraipur.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a comment

Your email address will not be published.