பிரதமர் மோடி ருவாண்டா,உகாண்டா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 நாள் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.முதல்கட்டமாக ருவாண்டா நாட்டிற்கு சென்ற பிரதமருக்கு, தலைநகர் கிகாலி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ருவாண்டா அதிபர் பால் ககமே விமான நிலையத்திற்கு நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து, அதிபர் மாளிகையில் ருவாண்டா அதிபர் பால் ககமேவை மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.