லண்டன் ரயில் நிலையத்துக்கு குண்டு மிரட்டல்

பிரிட்டன் தலைநகர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் ‘சேரிங் கிராஸ்’ சுரங்க ரயில் நிலையம் அமைந்துள்ளது. மிகவும் பரபரப்பான இந்த ரயில் நிலையத்தில் நேற்று காலை வழக்கம் போல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது, அங்கிருந்த ஒருவர் திடீரென ரயிலின் இருப்புப் பாதை பகுதிக்குச் சென்று தம்மிடம் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன பயணிகள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து அவரை பிடித்தனர். அவரை சோதனை செய்ததில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும், அவர் ஒரு மனநோயாளி என்பதும் தெரியவந்தது.

Leave a comment

Your email address will not be published.