லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு தேமுதிகவால் எந்த விதமான பலனும் இல்லை. வேலூர் லோக்சபா தேர்தலில் கூட, பிரேமலதாவின் சொந்த தொகுதியான ஆம்பூரில் கூட அதிமுக கூட்டணியால் திமுகவை விட அதிக வாக்குகள் வாங்க முடியவில்லை. பிரேமலதா இங்கு தீவிர பிரச்சாரம் செய்தது எல்லாம் வீணாய் போனது. இதனால் தேமுதிகவை இனியும் கூட்டணியில் வைத்து இருப்பது சரியாக இருக்குமா என்று அதிமுக தலைவர்கள் கருதுகிறார்கள்.
முன்பு கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தற்போது நல்ல நிலையில் இருக்க தேமுதிக நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது. தேமுதிகவை அதிமுகவும் கைவிட போவதாக வரும் தகவலால் பிரேமலதா தரப்பு ஆடிப்போய் இருக்கிறது. விஜயகாந்த்தின் உடல்நிலை சரியான நிலையில் இல்லாததால் அவராலும் தனது தொண்டர்களிடம் வந்து பேச முடியவில்லை என்பது இன்னும் வருத்தமான விஷயம்!🌐
லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு தேமுதிகவால் எந்த விதமான பலனும் இல்லை.
