வக்ஃப்வாரியவழக்குஅரசாணையைநிறுத்தி #வைத்துநீதிமன்றம்உத்தரவு
தமிழ்நாடு வக்ஃப் வாரிய வழக்கு இன்று 20.09.2019 மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை வந்தது.
வக்ஃப் வாரிய உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் MLA சார்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி
“நேற்று நீதிமன்றத்திற்கு கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரியத்தை கலைத்து தனி அதிகாரியை நியமித்து வெளியிட்டுள்ள அரசாணையை (Go) சுட்டிக் காட்டினார்,
அதற்கு உடனடியாக அரசு தரப்பு வழக்கறிஞர் வக்ஃப் வாரியத்திற்கு தனி அதிகாரியாக நியமித்துள்ள சித்தீக் IAS அவர்களை பதவி ஏற்க வேண்டாம் என கடிதம் வழங்கி விட்டோம் என்பதாக தெரிவித்தார்,
அதன் பிறகு நீதியரசர் கோவிந்தராஜ் அவர்கள் அரசு வெளியிட்டு இருக்கக் கூடிய அரசாணை அடுத்த விசாரணை திங்கள்கிழமை நடைபெற உள்ளதால் அது வரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவாஸ் கனி, முஹம்மது ஜான் ஆகியோரை உறுப்பினராக வக்ஃப் வாரியத்தை செயல்படுத்துவதில் என்ன பிரச்சனை உள்ளது என கேள்வி எழுப்பினார்.
அடுத்த விசாரணை திங்கள்கிழமை ( 23.09.2019) நடைபெற உள்ளது🔴