@ வங்கி மோசடி தொகை 74 சதவீதம் அதிகரிப்பு🌐

2018-19 ம் ஆண்டிற்கான அறிக்கையை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதில், ரூ.100 கோடிக்கும் அதிகமான வங்கி மோசடிகள் குறித்த அறிக்கையை தயாரிக்க வங்கிகள் நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொண்டன. 2018-19 ம் ஆண்டு வரையிலான 55 மாதங்களில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.52,200 கோடி. 2018-19 ம் நிதியாண்டில் வங்கி மோசடி எண்ணிக்கை 15 சதவீதமும், மோசடி செய்யப்பட்ட தொகையின் எண்ணிக்கை 73.8 சதவீதமும் அதிகரித்துள்ளது. வங்கி மோசடிகள் அதிகம் நடப்பதில் தனியார் வங்கிகள் முதலிடத்திலும், வெளிநாட்டு வங்கிகள் 2வது இடத்திலும், அதைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளும் உள்ளன. இவ்வாறு ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ வங்கி மோசடி தொகை 74 சதவீதம் அதிகரிப்பு🌐