வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 7 லட்சம் பேர் சிக்கி தவிக்கின்றனர்.
இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 7 லட்சம் பேர் சிக்கி தவிக்கின்றனர்.
மணிப்பூரில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்கு சுமார் 1.5 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மணிப்பூர் மற்றும் திரிபுராவில் ஏறப்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களில் 1,400 பேரை தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள், அஸ்ஸாம் ரைஃபிள் படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மீட்டனர்
பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. 200 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்
மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அறிக்கையின்படி, தெளபால் மற்றும் இம்பாலின் மேற்கு மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தனிமைப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 12,500 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5,200 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
101 நிவாரண முகாம்களில் சுமார் 25,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதேபோல், திரிபுராவில் உள்ள கோவாய் நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான வீடுகள், சாலைகள், ஏக்கர் கணக்கிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். அவர்கள் அளித்த தகவல்படி, கோவாய் மாவட்டத்தில் 6,000 பேர் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் தனிமைப்பட்டுள்ளனர். சுமார் 40,000 பேர் 173 நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் சாலைகள், மேம்பாலங்கள் சேதமடைந்ததால் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. உனகோடி மாவட்டத்தில் 21,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளம் காரணமாக மிசோரம் மாநிலமும் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக பேரிடர் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் வெள்ள பாதிப்பு பகுதியில் சிக்கிய 1,066 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளன. கனமழை தொடர்ந்ததால் லுங்லெய் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, தென்ஸால் நெடுஞ்சாலையில் ஐஸால்-லுங்லெய் வழிதடத்தில் போக்குவரத்து பாதித்துள்ளது.
1 comment