விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் தேர்தல் நடக்க போகிறது.

ரொம்ப நாளாக நடத்தாமல் இருந்து இப்போதுதான், விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் தேர்தல் நடக்க போகிறது. இந்த 2 தொகுதி தேர்தலுக்கும் எப்போதும் போல் இல்லாமல், அதிமுகவும், திமுகவும் படு மும்முரமாக இறங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே இரு கட்சிகளும் மின்னல் வேகத்தில் இறங்கி விட்டன. யார் இந்த தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்களோ, அதை வைத்தே உள்ளாட்சி தேர்தல், வரப்போகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்றும், அதற்கு இந்த இரு தொகுதிகளின் வெற்றி ஒரு அச்சாரமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் இரு தரப்புமே களத்தில் குதித்துள்ளது. வேட்பாளர்களை அறிவித்த கையோடு வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.🌐