விஜயபிரபாகரனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறோம்..

திருப்பூரில் சமீபத்தில் தே.மு.தி.க.வின் முப்பெரும் விழா நடந்தது. இந்த மேடையில் பேசிக் கொண்டிருந்த பிரேமலதா, திடீரென ’உங்களுக்கெல்லாம் ஒரு இனிப்பான சேதி. எங்கள் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறோம். பொண்ணு இந்த கொங்கு மண்டலம்தான். திருமண நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விஷயங்களை விரைவில் அதிகாரப்பூர்வமா கேப்டன் அறிவிப்பார்!’ என்று கட்சி விழாவை கல்யாண விழாவாக மாற்றினார். மேடையில் அமர்ந்திருந்த விஜயகாந்தும் இதை ரசித்துக் கேட்டார்.
@ கேப்டன் மகனின் கல்யாணம் பற்றி ஒரு தகவல் தடதடக்கிறது. அதாவது இந்த திருமணம் ஒரு காதல் திருமணமாம். அதாவது விஜயபிரபாகரன் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு பிரைவேட் எஞ்சினியரிங் காலேஜில் படித்திருக்கிறார். அப்போது அவரோடு படித்த ஒரு பெண்ணோடு காதல். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறதாம் இந்த காதல்.🌐