வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து ‘தங்க டாய்லெட்’ திருட்டு:

வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து ‘தங்க டாய்லெட்’ திருட்டு:

பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் மாளிகையில் தங்க டாய்லெட் இரு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. அதன்மதிப்பு ஒரு மில்லியன் பவுண்ட். இந்திய ரூபாய் மதிப்பில் 8.88 கோடி. இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கட்டெலன் இந்தத் தங்க டாய்லெட்டை வடிவமைத்திருந்தார். இதற்கு முன்பாக நியூயார்க்கின் குக்கென்ஹெய்ம் அருங்காட்சியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிளென்ஹெய்ம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தங்க டாய்லெட் திருட்டுப் போகியுள்ளது. டாய்லெட் திருட்டு தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்தபட்சம் இரண்டு வாகனங்களில் இந்த டாய்லெட்டை திருடர்கள் திருடிக் கொண்டு போய் இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.🌐