ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, டெபுடி கம்பெனி செக்ரட்டரி, மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களை பல்வேறு துறைவாரியாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி:
பி.காம்/எம்.காம், பி.டெக்/பி.இ, பி.சி.ஏ./எம்.சி.ஏ., சி.ஏ./ஐ.சி.டபுள்யூ.ஏ. போன்ற பட்டப் படிப்புகளை அந்தந்த தகுதிகளுக்கு ஏற்ப படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினர் ரூ.500ஐ பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் செலுத்தி செலானை பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். சுய கையொப்பமிட்ட புதிதாக எடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும்.
முக்கியத் தேதிகள்:
ஆன்லைனில் வரும் 11.5.2015 முதல் தொடங்கி 10.6.2015 வரை முதல் கட்ட பதிவையும் இரண்டாம் கட்ட பதிவை 20.6.2015 வரை பதிவு செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணத்தை 15.6.2015 வரை செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 26.7.2015