விலையை விசாரித்தால் வாங்கியே தீரனும்.!பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்…

விலையை விசாரித்தால் வாங்கியே தீரனும்.!பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்…

‘பழங்களின் விலையை விசாரித்தால், கண்டிப்பாக வாங்க வேண்டும்’ என பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்!’- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்

பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கூறுகையில், ” நான் திருச்சி செல்வதற்காக ‘பாயின்ட் டூ பாயின்ட்’ வண்டியில் அமர்ந்திருந்தேன் . பெயர் தெரியாத பழ வியாபாரி ஒருவர், கையில் ஆறு மாதுளைகளுடன் வந்து பழம் இருபது இருபது என்று அந்த பழங்களைக் காண்பித்தார். நான் இருபது ரூபாயைக் கொடுத்து பழங்களைக் கேட்டேன். அதை பிளாஸ்டிக் கவரில் போட்ட அவர், 250 எடு என்றார் . ஏன் என்று கேட்டதற்கு, இவ்வளவு பழத்தை 20 ரூபாய்க்கா கொடுப்பாங்க ஒரு எலுமிச்சம் பழம் விலை என்னானு உனக்குத் தெரியுமா? திருச்சில இருந்து வந்துட்டு 20 ரூபாயை கொண்டுகிட்டு’ என்று என்னை பஸ் பயணிகள் நிறையப் பேர் இருக்கும்போது மரியாதை இல்லாம பேசிட்டார். நான் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவன் .👇🏾🌐