விளை நிலங்களில் வைரம்: ஆந்திர கிராமவாசிகளின் தீராத தேடல்

பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஆந்திர பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் அமைந்துள்ள வஜ்ரகரூர், பகிதிராயீ, ஜொன்னாகிரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வைரம் மற்றும் பிற விலை உயர்ந்த கற்களைத் தேடி விளை நிலங்களை நோக்கிப் படை எடுக்கின்றனர்.

பழங்காலம் முதலே ராயலசீமா பகுதி அதன் கனிம வளத்துக்கு பெயர் பெற்றது.

கர்னூல், கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் வைரச் சுரங்கங்கள் அமைந்துள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜெஹ்ராபி அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளி. “எங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு வைரத்தைத் தேடி வந்துள்ளோம். எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மதியம் வரை தேடுவோம். ஏதும் கிடைக்காவிட்டால் கிராமத்துக்கே திரும்பிவிடுவோம்,” என்கிறார் அவர்.

“கடந்த ஆண்டு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தை இங்கு சிலர் கண்டுபிடித்தனர். அதனால், நாங்களும் அத்தகைய மதிப்பு மிக்க கற்களை கண்டுபிடிக்கலாம் எனும் நம்பிக்கையில் வந்தோம்,” என்கிறார் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலு நாயக்.

இவர்கள் யாருக்கும் ஆபரணக் கற்கள் குறித்த அறிவியல்பூர்வமாகத் தெரியாது. வழக்கத்துக்கு மாறாகத் தோன்றும் கற்கள் அனைத்தையும் எடுத்து, வைரமாகத்தான் இருக்கும் எனும் நம்பிக்கையில் தங்கள் பைகளுக்குள் போட்டுகொண்டு போகின்றனர்.

வைரத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வன்னுருசா நிலத்தில் சூரியன் மற்றும் நிலவின் கதிர்கள் விழுவதை அடிப்படையாக வைத்தே அவற்றைக் கண்டறிய முடியும் என நம்புகிறார்

“இது கரியமிலக் கல். இது வைரம் அல்ல. ஆனால் இதில் வைரம் உள்ளது. இந்தக் கல் உள்ள பகுதிகளில் வைரம் இருக்கும். வைரத்தைத் தேடும் முன், இந்தக் கற்களைத் தேட வேண்டும். இந்தக் கோற்பாட்டின் அடிப்படையில்தான் ஆங்கிலேயர்கள் அகழ்வாராய்ச்சி செய்தனர்,” என்கிறார் அவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வைரத்தை கண்டறிந்ததாக அவர் கூறுகிறார். வைரம் என்று தாங்கள் நம்பும் கற்களை பொறுக்கிச் சென்று இடைத் தரகர்களிடம் கொடுக்கின்றனர், இந்த கிராம வாசிகள். இடைத் தரகர்கள் கற்களின் அளவைப் பொருத்து ஒரு சிறு தொகையை கொடுக்கிறார்கள்.

இப்பகுதியில் வைரம் உள்ளது குறித்து பல்வேறு கதைகள் நிலவுகின்றன.

கிருஷ்ண தேவராயர் காலத்தில் இங்கு வைர வணிகம் அமோகமாக இருந்ததாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.

விஜயநகரப் பேரரசு சரிந்தது, இயற்கைப் பேரிடர் உள்ளிட்டவற்றால் வைர வணிகம் காலப்போக்கில் ஒழிந்ததாகவும், மழைக் காலங்களில் மண்ணின் மேற்பரப்பில் இருக்கும் வைரக் கற்களில் சில மேலே தெரியும் என்றும் உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

இப்பகுதியில் வைர வணிகம் நிகழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகளும் உள்ளன   –  BBC

ஆந்திராவில் உள்ள கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்கள் மற்றும் தெலங்கானாவில் உள்ள மெஹபூப்நகர் மாவட்டம் ஆகியன தங்கள் கனிம வளத்துக்காக நன்கு அறியப்பட்டவை என்று கூறும் இந்திய புவியியல் அமைப்பின் இணை இயக்குநர் ராஜா பாபு, பூமியின் கீழ் அடுக்குகளில் புவியியல் மாற்றங்கள் நிகழும்போது உள்ளே இருக்கும் வைரக் கற்கள் மேலே வரலாம் என்கிறார்.

நீரோட்டம், மழையால் உண்டாகும் வெள்ளப்பெருக்கு, கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்ற மண் அரிப்பு ஆகியவையும் புதைந்துள்ள வைரக் கற்கள் மேலே வருவதற்கான காரணங்கள் பாபு.

பூமியின் மேற்பரப்புக்கு கீழே 140 – 190 அடி வரை அதிகமான அழுத்தமும் வெப்பமும் உண்டாகும்போது அங்குள்ள கார்பன் அணுக்கள் வைரக் கற்களாக மாறுவதாக இந்திய புவியியல் அமைப்பின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எரிமலைச் சீற்றத்தின்போது வெளியாகும் நெருப்புக் குழம்பு பின்பு கிம்பர்லைட் மற்றும் லாம்ப்ரொவைட் பாறைகளாக மாறும். அவற்றில்தான் ஆயிரம் இருக்கும். இந்த அடிப்படையில்தான் கனிம நிறுவங்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும்.

16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட நூல்கள் மற்றும் கல்வெட்டுகளில் அங்கு கனிம அகழ்வு நடந்ததாகக் கூறுகின்றன.

பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் ஜொன்னாகிரி கிராமத்தில் வைரம் தோண்டி எடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக அங்குள்ளஆண்டுகால கிணறு ஒன்றைக் காட்டுகின்றனர் உள்ளூர்வாசிகள் . இது ஜான் டெய்லர் சுரங்கக்குழி என்று அழைக்கப்படுகிறது.

அங்கு வைரம் பட்டைதீட்டும் மையத்தை 1970இல் இந்திய அரசு நிறுவியது. பின்னர் கிம்பர்லைட் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை ம் அங்கு அமைக்கப்பட்டன.

வெளியூர்களில் இருந்து வந்து இங்கு தங்கியும் சிலர் வைரத்தை தேடுகின்றனர்.   –  BBC

கடந்த 2000 ஆண்டுகளாகவே இங்கு வைரம் தோண்டி எடுக்கப்படுவது அசோகர் கால கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனினும் தொல்லியல் துறையால் இந்தக் கூற்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசம் மட்டுமல்லாது அருகிலுள்ள கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில் இருந்தும் வைரத்தைக் கண்டுபிடிக்கலாம் எனும் நம்பிக்கையில் மக்கள் தாங்கள் வாழும் ஊர்களில் இருந்து குடிபெயர்கின்றனர்.

அவர்கள் வேலையை விட்டுவிட்டு, இந்த நிலங்களுக்கு அருகில் தற்காலிகமாகத் தங்குகின்றனர். மர நிழலிலும், உள்ளூர் பள்ளிகளிலும் அவர்கள் தங்குகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம் எதிர்காலத்தில் எதாவது தங்களுக்கும் கிடைக்கும் எனும் நம்பிக்கைதான்.

1 comment

Leave a comment

Your email address will not be published.