சென்னை: விவசாய நிலங்களை பாதிக்கப்படாமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று கூறுகிறார் ரஜினி. அப்படியானால் சாலை நல்லது என்று கூறுவதற்கு முன்பு விவசாய நிலங்களுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக நிலங்களை மார்க் செய்வதை கண்டித்து விட்டுத்தானே சாலைகள் நல்லது என்று அவர் பேச வேண்டும். தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சாலையானது சென்னை – சேலம் இடையே அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கு இடைஞ்சலாக உள்ள வீடு, விவசாய நிலங்கள் என அரசு கையகப்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இதுபோன்ற பிரமாண்ட சாலைகள் வரப் போகுதாம். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்காகத்தான் சாலையே, ஆனால் அந்த சாலையே வேண்டாம் என்று கூறும் பொதுமக்களின் நியாயத்தை காது கொடுத்து அரசு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
சமூக ஆர்வலர்கள் இதற்காக போராட்டம் நடத்தி 90-க்கும் மேற்பட்டோர் சிறை சென்றனர். எனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்கள் வேண்டாம் என்றும் அதற்கு பதில் மாற்று திட்டங்களை செயல்படுத்தலாம் என்றும் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால் போலீஸார் மூலம் போராட்டங்கள் கலைக்கப்படுகின்றன.
ரஜினி பரபர பேச்சு பாஜக, அதிமுகவை தவிர்த்து தமிழகமே எதிர்த்து வரும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் 8 வழிச்சாலை திட்டங்களால் நாடு முன்னேறும். தொழில் பெருகும். வேலைவாய்ப்புகளும் பெருகும். எனவே எனது ஆதரவு இந்த திட்டத்துக்கு உண்டு.
செயல்படுத்த வேண்டும் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு உரிய இழப்பீட்டையோ அல்லது நிலத்தையோ அரசு வழங்க வேண்டும். பெரும்பாலும் விவசாய நிலத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.