வீட்டில் 1.5 கிலோ தங்க நகைகள் திருடு போனதாக நடிகர் பார்த்திபன் போலீசில் புகார்..!!

பிரபல நடிகர் பார்த்திபன் வீட்டில் 1.5 கிலோ தங்கை நகைகள் திருடு போயுள்ளதாக சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் பார்த்திபன்.

சமீபத்தில் சென்னை திருவான்மியூரில் உள்ளது தனது வீட்டில் சுமார் 60 சவரன் மதிப்பலான தங்க நகைகள் திருடு போனதாக புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதே வீட்டின் மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த நகைகளும் திருடு போயுள்ளதாக பார்த்திபன் இன்று புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே திருடு போன நகைகளுடன், தற்போது மாயமாகியுள்ள நகைகளையும் சேர்ந்து மொத்தம் 1.5 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் தனது திருவான்மியூர் வீட்டிலிருந்து திருடப்பட்டுள்ளதாக பார்த்திபன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய திருவான்மியூர் பகுதி போலீசார், இந்த திருட்டு சம்பவத்தில் நடிகர் பார்த்திபன் வீட்டு பணியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வீட்டில் வேலை பார்த்து வரும் பெண் ஒருவரை பிடித்து, போலீசார் திருட்டு போன நகைகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published.