வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி தோல்வி

இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட்ஆப்–ஸ்பெயினில் கடந்த 6–ந்தேதி தொடங்கியது.

போர்ட் ஆப்–ஸ்பெயின்,

இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட்ஆப்–ஸ்பெயினில் கடந்த 6–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட் இண்டீஸ் 414 ரன்களும், இலங்கை 185 ரன்களும் எடுத்தன. பின்னர் 229 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 453 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி கடைசி நாளான நேற்று 226 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. 5–வது சதத்தை எட்டிய தொடக்க ஆட்டக்காரர் குசல் மென்டிஸ் 102 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது டெஸ்ட் போட்டி வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது.

Leave a comment

Your email address will not be published.