வேதனையில் கண்ணீர் விட்டு அழுத தோனி
—————————————————————————————-
நியூசிலாந்து அணியுடனான இன்றைய போட்டியில் அவசரப்பட்டு விக்கெட்டை இழந்த தோனி வேதனையில் கண்ணீர் விட்ட வீடியோ ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவலையடைய செய்துள்ளது
12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்குமான அரையிறுதி போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்டில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் இந்திய பந்துவீச்சை அடிக்க முடியாமல் திணறினர். கப்டில் 14 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார்.
கேப்டன் வில்லியம்சன் நிக்கோல்ஸ் உடன் சற்று நிலைத்து ஆடி அணிக்கு ரன்கள் சேர்த்தார். ஜடேஜா வீசிய 19வது ஓவரில் நிக்கோல்ஸ் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்ததாக சஹால் பந்தில் கேப்டன் வில்லியம்சன் 67 ரன்களுக்கு வெளியேறினார். நீசம் 12 ரன்களுக்கும் காலின் 16 ரன்களுக்கும் வெளியேறினார். 46.1 ஓவர்களில் 211/5 என ஆடிவந்த நிலையில், மழை குறுக்கீட்டால் ஆட்டம் தடைபட்டது. இடைவிடாமல் மழை நீடித்ததால் ஆட்டம் ரிசர்வ் டே-விற்கு மாற்றப்பட்டது.
இரண்டாம் நாள் 46.1 ஓவரிலிருந்து மீண்டும் துவங்கிய ஆட்டத்தில், 67 ரன்களில் இருந்த டைலர் மற்றும் 3 ரன்களில் லேதம் இருவரும் களமிறங்கினர். ராஸ் டைலர் 74 ரன்கள் இருக்கும் நிலையில், ஜடேஜாவிடம் ரன் அவுட் ஆகி வெளியேறினார். லேதம் 10 ரன்களிலும் ஹென்றி 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித். கோலி, கே எல் ராகுல் மூவரும் 1 ரன்களில் வெளியேறினர். அடித்ததாக பண்ட் 32 ரன்களிலும், கார்த்திக் 6 ரன்களிலும் ஆட்டமிழக்க, பாண்டியா நிலைத்து ஆடி வந்தாலும் 32 ரன்களுக்கு இவரும் வெளியேறினார்.
92/6 என இருக்க ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் தோனி, இந்த சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு நம்பிக்கை கொடுத்தது. 7வது விக்கெட்டுக்கு 116 சேர்த்தது இந்த ஜோடி. அதிரடியாக ஆடிய ஜடேஜா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், பின்னர் 50 ரன்களுக்கு தோனி ரன் அவுட் ஆக, இந்திய அணி 18 ரன்களில் தோல்வியை தழுவியது.
இதில் ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக திகழ்ந்த தோனி, கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறும் பொழுது வேதனையில் அழுதே விட்டார், இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தோனியை பிடிக்காதவர்களும் கூட இந்த வீடியோவை பார்த்து கண்ணீர் விட்டு வருவதை சமூக வலைதளங்கள் மூலம் பார்க்க முடிகிறது.🛑