‘ஸ்டார்ட் அப்’ துறையில் குவியுது முதலீடு; ‘வென்ச்­சர் கேப்­பி­டல்’ நிறுவனங்களிடம் பெருகுது ஆர்வம்

மும்பை : வலை­த­ளங்­களில் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்ய, புதி­தாக துவக்­கப்­படும் ‘வென்ச்­சர் கேப்­பி­டல்’ நிறு­வ­னங்­கள் அதிக ஆர்­வம் காட்­டு­வது, ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

தொழில்­நுட்­பம் சார்ந்த புதிய கண்­டு­பி­டிப்­பு­கள், சேவை­கள் போன்­ற­வற்­றில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. அத­னால், இத்­து­றை­யில் முத­லீடு செய்ய, ‘வென்ச்­சர் கேப்­பி­டல்’ எனப்­படும் துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­கள் ஆர்­வம் காட்­டு­கின்றன.

லாபம் :
இவை, புது­மை­யான கருத்­து­ரு­வில் உரு­வாக்­கப்­படும் ஒரு தொழி­லுக்கு, துவக்க நிலை­யி­லேயே முத­லீடு செய்­கின்றன. அந்த தொழில், பின்­னா­ளில் லாப­ம­ளிக்­குமா என, உறு­தி­யாக தெரி­யாத நிலை­யில் மேற்­கொள்­ளப்­படும் முத­லீடு என்­ப­தால், ‘துணி­கர முத­லீடு’ என்­ற­ழைக்­கப்­ப­டு­கிறது. ‘பிளிப்­கார்ட், ஸ்நாப்­டீல், ஓலா’ போன்ற ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் வளர்ச்­சிக்கு, துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­கள், குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்ளன.

இந்­தாண்டு துவங்கி இது­வரை, புதி­தாக துவக்­கப்­பட்ட ஆறுக்­கும் அதி­க­மான துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­கள், முதன் முத­லாக, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில், முத­லீடு செய்­துள்ளன. இந்­த­ வ­கை­யில், இன்­போ­சிஸ் நிறு­வ­ன­ருள் ஒரு­வ­ரான நந்­தன் நீலே­க­னி­யின் பன்­ட­மென்­டம்; சஞ்­சீவ் அகர்­வா­லின், ஹெலி­யன் வென்ச்­சர்ஸ்; பிளிப்­கார்ட் நிறு­வ­னர்­களின் முத­லீட்டு ஆலோ­ச­க­ரான சைலேஷ் துல்­ஷன் துவக்­கி­யுள்ள, 021 கேப்­பி­டல் ஆகி­யவை, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் முத­லீடு மேற்­கொண்­டுள்ளன.

சீனா­வைச் சேர்ந்த, யுனி­கார்ன் கேஷ்­பஸ் நிறு­வ­னத்­தின், ஜேட்­வேல்யு பின்­டெக்; தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­யும், லியோ கேப்­பி­டல், ரஷ்­யா­வைச் சேர்ந்த, ‘எமரி கேப்­பி­டல்’ ஆகிய நிறு­வ­னங்­களும், இந்­திய ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­துள்ளன.

வளர்ச்சி :
இவை தவிர, வட அமெக்கா, ஐரோப்பா மற்­றும் வளர்ந்து வரும் நாடு­களில், தொழில்­நுட்­பம், எரி­சக்தி, பொழு­து­போக்கு துறை­க­ளைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­யும், ‘யெஸ் கேப்­பி­டல்’ நிறு­வ­ன­மும், குறிப்­பி­டத்­தக்க நிதி­யு­த­வியை வழங்­கி­யுள்­ளது.

அவென்­டஸ் கேப்­பி­டல் நிறு­வ­னத்­தின் இணை தலை­வர் பங்­கஜ் நாயக் கூறி­ய­தா­வது: சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் போட்­டிக்கு இடை­யி­லும், உள்­நாட்டு ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், சிறப்­பாக செயல்­ப­டு­கின்றன. அத­னால் தான், முத­லீ­டு­கள் குவி­கின்றன. ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், சுய வளர்ச்­சி­யு­டன், முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் மதிப்பை உரு­வாக்­கித் தரு­கின்றன.

அத­னால், துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­கள், இடர்ப்­பாட்­டிற்கு வாய்ப்பு உள்ள போதி­லும், தொடர்ந்து ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில், பல கட்­டங்­க­ளாக, முத­லீ­டு­களை மேற்­கொள்­கின்றன. இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த, 10 ஆண்­டு­க­ளாக, துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­களின் வர்த்­த­கம் சாதா­ர­ண­மா­கவே இருந்­தது. அத­னால், இத்­த­கைய நிறு­வ­னங்­களில் இருந்து பலர் வெளி­யேறி, புதிய துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­களை துவக்கி வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு உள்ள அனு­ப­வத்­தால், வளர்ச்சி வாய்ப்­புள்ள, ‘ஸ்டார்ட் அப்’ துறை­யில் முத­லீடு செய்­கின்­ற­னர்.
-ஆனந்த் லுனியா , இந்தியா கோட்டன்ட், துணிகர முதலீட்டு நிறுவனம்

1 comment

Leave a comment

Your email address will not be published.