ஸ்மார்ட் டைம் 200, தொலைபேசி மற்றும் ஃபிட்னஸ் பேண்ட் அம்சங்கள் ஒருங்கிணைந்த ஒரு கைக்கடிகாரம்

 

ஸ்மார்ட் புரட்சி இப்போது நடக்கிறது, அது உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றி அமைக்கிறது. நீங்கள் யார் மற்றும் உங்களது வாழ்க்கையை நிர்வகிப்பதற்கு உதவுவதற்கு தேவையான பல்வேறு அம்சங்களுடன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பவற்றுக்கான முக்கிய மையமாக உங்களது தொலைபேசி மாறிவிட்டது. உங்களது தொலைபேசி இவ்வளவையும் செய்கையில் அதே வேலையை ஏன் உங்களது கைக்கடிகாரம் செய்யக்கூடாது?

தகவல் தொழில்நுட்ப பாகங்கள், சவுண்ட் சிஸ்டம்ஸ், மொபைல்/ லைஃப் ஸ்டைல் பாகங்கள் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், தனது கையில் அணியக்கூடிய பொருட்கள் சந்தையை வலுப்படுத்தும் விதமாக ‘ஸ்மார்ட் டைம் 200’ என்று அழைக்கப்படும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்துகிறது.

● சப்போர்ட் நானோ சிம்
● மைக்ரோ SD கார்டு ஸ்லாட் உள்ளது
● BT வயர்லெஸ் உள்ளது
● தொடு திரை கொண்டது
● இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் கொண்டது
● பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர் உள்ளது
● கேமரா உள்ளது

இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் அதன் ஸ்மார்ட் கைக்கடிகார வரிசையில் மேம்பட்டது மற்றும் மைக்ரோ SD கார்டு ஆதரவுடன் 32 GB வரையில் வெளிப்புற நினைவகத்தை ஆதரிக்கிறது. இதன் பேட்டரி திறன் 380 mAh ஆகும். இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் வட்டவடிவ 2.71 cms கொண்ட கெப்பாசிடிவ் தொடுதிரை டிஸ்பிளேவுடன் வருகிறது. இதில் மைக்ரோ சிம்/ நானோ சிம் உள்நுழைக்கும் வகையில் சிம் ஸ்லாட் இருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை ஒரு முழுமையான தனித்த சாதனமாக பயன்படுத்த முடியும்.

உங்களது ஸ்மார்ட்போனை ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட் கைக்கடிகாரத்துடன் இணைத்து உங்களது அழைப்புகளை ஏற்கலாம் அல்லது கைக்கடிகாரத்தில் உள்ளமைக்கப்பட்டிருக்கும் சிம் கார்டு ஆதரவைப் பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கலாம். எளிதாக தொடும் வசதியுடன் உங்களது அழைப்புகளை ஏற்க இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் உள்ளது. இந்த இன்-பில்ட் ஸ்பீக்கர் பயனருக்கு வசதியாக இருக்கும் வகையில், குரல் அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கு போதுமான ஒலியுடன் வருகிறது. யார் அழைக்கிறார் எனும் அழைப்பு விவரங்கள் தவிர்த்து, இந்த கைக்கடிகாரம் SMS, மின்னஞ்சல் மற்றும் பலவற்றுக்கான அறிவிப்புகளையும் வழங்குகிறது.

இந்த ரிஸ்ட் கேண்டி தற்போதைய பரபரப்பான வாழ்விற்கு உங்களை பொருத்தும் வகையில் அமைதியான நினைவூட்டலுடன் கூடிய தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து சரிவிகிதத்தில் கலந்த வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பீடோமீட்டர் அம்சம் எவ்வளவு அடிகள் நீங்கள் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்ற மற்ற தரவுகளுடன் பயனர் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார் என்ற விவரத்தைத் தருவதற்கு உதவுகிறது. இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் நீங்கள் ஓய்வெடுக்கும் நேரங்களை சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் உங்களது தூக்க சுழற்சியையும் கண்காணிக்கிறது.

இன்-பில்ட் ஸ்பீக்கர், முன் கேமரா, சவுண்ட் ரெகார்டர், உலவி, கோப்பு மேலாளர் மற்றும் பல அம்சங்களுடன் தொடுதிரை கொண்ட இந்த கைக்கடிகாரம் உங்களது பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கும். மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தில் உள்ள SMS அம்சம் மற்றும் செய்திகளை படித்தல்/ எழுதுதல் வசதியைப் பயன்படுத்தி அதனை கூடிய வரையில் அனுப்பவோ, பெறவோ இயலும். இந்த கைக்கடிகாரத்தில் ஆண்டி லாஸ்ட் அம்சமும் இருக்கிறது.

‘உலகம் தொழில்நுட்ப ஆர்வம் மிகுந்ததாக மாறிவிட்டது, மேலும் அதிக விஷியங்களைச் செய்யக்கூடிய தயாரிப்புகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது, இந்த இடைவெளியை இணைக்கும் பொருட்டு எங்களது ஸ்மார்ட் கைக்கடிகார வகைகளின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டைம் 200 அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஒரு வழக்கமான கைக்கடிகாரமாக பயன்படுத்த முடியும் என்பது தவிர்த்து, இதில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அத்துடன் ஃபிட்னஸ் தரவுகளை சேமிக்க இயலும் என்பது கூடுதல் நன்மை ஆகும். இது ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய கைக்கடிகாம் ஆகும்.’ என ஜெப்ரானிக்ஸின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி தெரிவித்தார். மேலும் அவர் கையில் அணிந்து கொள்ளக் கூடிய பொருட்கள் சந்தையை இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் வலுப்படுத்தும் என்றார்.

இந்த கைக்கடிகாரம் செவ்வக வடிவம் மற்றும் வட்ட வடிவில் கிடைக்கிறது.  இந்த தயாரிப்பு இந்தியா முழுவதும் உள்ள முன்னணி கடைகளில் கிடைக்கும்.

Leave a comment

Your email address will not be published.