ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி: காலிறுதியில் ரோஜர் பெடரர்

ஹாலே(வெஸ்ட்ஃபாலன்),

ஜெர்மனியின் ஹாலே வெஸ்ட்ஃபாலன் நகரில், க்ராஸ்கோர்ட் ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறன. இதில் உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது 10-வது சாம்பியன் பட்டத்தைப் பெறுவதற்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் காலிறுதிக்கான தகுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரான்சின் வீரர் பெனாய்ட் பைரே-வை, பெடரர் எதிர்கொண்டார்.

இதில் பெடரர் 6-3, 3-6, 7-6 (9/7) என்ற கணக்கில் பைரே-வை வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இன்று நடக்க இருக்கும் காலிறுதி ஆட்டத்தில், ரோஜர் பெடரர் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென்-உடன் மோத உள்ளார்.

8 comments

Leave a comment

Your email address will not be published.