சோராபுதீன் போலி என்கௌண்டர் வழக்கில் முதல் குற்றவாளியான அமித்ஷா 2010 ஜூலையில் இருந்து அக்டோபர் 2010 வரை மூன்று மாதம் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தார்.
♦ அவ்வழக்கின் நேரடி சாட்சி துளசி பிரஜாதிபதி உத்தமர் மோடி ஆட்சி நடத்திய உன்னதமான குஜராத்தில் மர்மமாக சுட்டு கொல்லப்பட்டார். இன்று வரை அதற்காக யாரும் கைதாகவில்லை.
♦ சோராபுதீன் வழக்கில் அமித்ஷா நீதிமன்றத்தில ஆஜாராகியே தீர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி லோயா டிசம்பர் 1, 2014 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
♦ அதே வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்து டிசம்பர் 31, 2014 அன்று தீர்ப்பு எழுதிய சதாசிவம் கேரளா கவர்னர் ஆனார்.
♦ தியாகி அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆனார்.
♦ கொலை வழக்கில் அமித்ஷா கைதான காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், நேற்று அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் போது வழக்கு ஏதும் பதியப்படாமலேயே நேற்று கைதியானார்.🌐