🌍சென்னை ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த தென்னக ரயில்வே!

சென்னை கடற்கரை – தாம்பரம்- செங்கல்பட்டு – திருமால்பூர்- அரக்கோணம் மார்க்கத்தில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

ஜூலை ஒன்றாம் தேதி முதல், சென்னையில், 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘சென்னை கடற்கரை – தாம்பரம்- செங்கல்பட்டு – திருமால்பூர்- அரக்கோணம் மார்க்கத்தில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி, செங்கல்பட்டுக்கும் புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படும்.🌐