🌏♨🤝மீண்டும் ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்து… பீதியில் பொதுமக்கள்..!

❀🌏News by Madan

🌏♨🤝மீண்டும் ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்து… பீதியில் பொதுமக்கள்..!

🌏♨🤝சென்னையை போன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

🌏♨🤝விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊரணிபட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜானகி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் மின்சாரம் வந்த போது, ஜானகியின் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து தீ மளமளவென பல்வேறு இடங்களில் பரவியது.

🌏♨🤝இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்த விபத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே சென்னையில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.*