1000 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கான சட்டம் ரத்து
சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், பயனற்றதாக இருக்கும் 58 சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கடந்த வாரம் மசோதா நிறைவேறியது.
கடந்த 1999-ம் ஆண்டு அமலில் வந்த இந்த சட்டம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வகை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு அப்போதைய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதன் மூலம் 1978-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 1999-ல் அமலாக்கப்பட்டது. தற்போது 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.