மத்திய 🌊வங்கக் கடலில் காற்று சுழற்சி-2 நாட்களுக்கு மழை☔

மத்திய 🌊வங்கக் கடலில் காற்று சுழற்சி-2 நாட்களுக்கு மழை☔

மத்திய 🌊வங்கக்கடலில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளதை அடுத்து 🏛தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும், சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. தமிழகத்தில் சில மாவட்டங்களில் நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது😐. இதனால் ஏற்பட்ட வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக 🌊வங்கக்கடலில் :rain_cloud:மழைமேகம் சூழ்ந்திருந்தது. அதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று ☔மழை பெய்தது. அதிகபட்சமாக பவானியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. உதகமண்டலம், நடுவட்டம் 70 மிமீ, தோவாலா, வால்பாறை 60 மிமீ, சின்ன கல்லார் 40மிமீ, பேச்சிப்பாறை, மாதவரம், பாப்பிரெட்டிபட்டி 10 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், 🏛சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று ☔பலத்த மழை பெய்தது. இந்நிலையில், 🌞வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்ட காற்று சுழற்சி 🌊மத்திய வங்கக் கடல் பகுதியில் வலுப்பெற்று💪 நிலை கொண்டுள்ளது😯. இதனால் காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது👍. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான ☔மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது