ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,
*மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார்* என்றார், அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம்
*இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தரமுடியும்* என்றனர்.
தந்தை, *பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார்* என்றார்.
அவன் போய் கேட்டு விட்டு,தந்தையிடம், *இதற்கு 5000 டாலர் தரமுடியும்* என்றனர்,
தந்தை, *இதனை நூதனசாலைக்கு museum கொண்டு சென்று விலையை கேட்டுப் பார்* என்றார்,
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், *நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குற்படுத்த ஒரு வரை வரவழைத்து பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்* என்றனர்.
தந்தை, மகனைப் பார்த்து, *மகனே! சரியான இடமே உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிருத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை* என்றார்.👇🏾🌐
👆🏽*உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்*
*உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே*
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்.🌐