நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் லேம்ப்ஸ்ராக் காட்சிமுனை சுற்றுலா தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ தற்போது பூத்து குலுங்குகிறது. இதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொத்தம் 36 வகை குறிஞ்சி மலர்களில் 8 வகை குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் வளர்கின்றன.
சுமார் 60 நாட்களுக்கு மட்டுமே இந்த மலர்களை காண முடியும் என்பதால் இதனை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.