2,000 புதிய பேருந்துகள் – ரூ.600 கோடி மதிப்பில் வாங்கப்படும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்….
-50 கோடி ரூபாய் செலவில் 10 போக்குவரத்து பணிமனைகள் நவீனப்படுத்தப்படும்.
-கரூரில் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும்.
-296 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.79 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
-32 மாவட்டத்தில் தலா ஒரு மருத்துவமனை வீதம் பல்வகை காயங்களுக்கு சிகிச்சையளிக்க உலக தரம்வாய்ந்த தீவிர சிகிச்சை மையம்.
-ஈரோடு அரசு மருத்துவமனை ரூ.67.76 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என கூறினார்.