24 மணி நேரத்தில் 10 லட்சம் முன்பதிவுகள்! – மிரட்ட வரும் `ரெட்மி நோட் 8′

24 மணி நேரத்தில் 10 லட்சம் முன்பதிவுகள்! – மிரட்ட வரும் `ரெட்மி நோட் 8′

நோட் 8 மாடல்களில் பின்புறம் 4 கேமராக்கள் இருக்குமென முன்பே தகவல்கள் வெளியாகின. 64 மெகாபிக்ஸல் சென்ஸாருடன் வரும் முதல் மொபைல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

நோட் 8 மாடல்களில் பின்புறம் 4 கேமராக்கள் இருக்குமென முன்பே தகவல்கள் வெளியாகின. 64 மெகாபிக்ஸல் சென்ஸாருடன் வரும் முதல் மொபைல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 29-ம் தேதிதான் சீனாவில் ரெட்மி நோட் 8 மற்றும் நோட் 8 ப்ரோ மாடல் மொபைல்கள் அறிமுகமாகின்றன. அதற்கான முன்பதிவை ஷியோமி நிறுவனம் அறிவித்த 24 மணி நேரத்தில் தான் 10 லட்சம் மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நோட் 8-க்கு முந்தைய வெர்ஷனான நோட் 7 மொபைல் சென்ற வாரம்தான் 2 கோடி மொபைல்கள் விற்பனையாகி சாதனை செய்திருந்தது. சீனாவில் புகழ்பெற்ற வெய்போ என்ற சமூக வலைதளத்தில் ஷியோமி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.👇🏾🌐
நோட் 8 மாடல்களில் பின்புறம் 4 கேமராக்கள் இருக்குமென முன்வே தகவல்கள் வெளியாகின. 64 மெகாபிக்ஸல் சென்ஸாருடன் வரும் முதல் மொபைல் இதுதான். பல கேமிங் ஆக்ஸசரீஸ்களை இந்த நோட் 8 மாடலுடன் இணைத்துக்கொள்ள முடியுமென்பது இதன் இன்னொரு ஹைலைட். நிறைய நேரம் விளையாடினால் மொபைல் சூடாகும் என்பதால் லிக்விட் கூலிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது நோட் 8. 4500 mAh பேட்டரியும் நீண்ட நேரம் தாங்குமென சொல்கிறது ஷியோமி. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரும் தருகிறது ஷியோமி. இதன் மூலம் விரைவில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். கேமர்களுக்கு எந்தத் தொல்லையும் தரக்கூடாது என்பதே நோட் 8 மொபைலின் நோக்கமாக இருக்கிறது.