3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், தேனி, திருச்சி, வேலூர், கிருஷ்ணகிரி திண்டுக்கல் தருமபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் லேசாக விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.