38 வயதுக்காரரிடம் விவாகரத்து கோரும் 11 வயது சிறுமி

சூடான் நாட்டில் 11 வயது சிறுமி தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நரக வேதனை காரணமாக தனது 38 வயது கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

சூடான் நாட்டில் பெண்கள் 18 வயதை பூர்த்தி செய்வதற்கு முன்னரே திருமணம் செய்து வைப்பது பின்பற்றப்பட்டு வருகிறது. சிலர் வறுமையின் காரணமாக தங்களது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள முடியாத காரணத்தால் திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். அமல் என்ற 11 வயது சிறுமியை அவரது தந்தை 38 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
அமல் வீட்டில் 6 பெண் பிள்ளைகள். இதனால் வறுமையின் பிடியில் சிக்கிய இவர்களது குடும்பம் சாப்பிடுவதற்கே சிரமப்பட்டது. இந்த நேரத்தில் தான் சிறிது வசதியான 38 வயது நபருக்கு தனது 11 வயது மகளை திருமணம் செய்துவைத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அமலை அந்நபர் அடித்து கொடுமைபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுமி அமல் கூறியதாவது, எனது கணவர் என்னை தினம் தினம் சித்திரவதை செய்வார்.இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டேன்.ஆனால், எனது தந்தை மீண்டும் என்னை எனது கணவரிடமே அனுப்பிவிட்டார். இரவில் நான் அனுபவித்த வேதனைகள் அதிகம். உடல் ரீதியாவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தால் அவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.