4 நாடுகள் கால்பந்து: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி…

4 நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மும்பை,
4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கென்யாவை சந்தித்தது. மழைக்கு மத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. 100-வது சர்வதேச போட்டியில் ஆடிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 68-வது நிமிடத்திலும், 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெஜெ லால்பெகுலா 71-வது நிமிடத்தில் கோல் போட்டார். இந்திய அணி முதல் லீக் ஆட்டத்தில் சீன தைபே அணியை வென்று இருந்தது. 7-ந் தேதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Leave a comment

Your email address will not be published.