இந்தியாவின் ஜிடிபி 7.5 சதவீத வளர்ச்சியடைய சாத்தியமுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
நடப்பாண்டின் ஏப்ரல்- ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதம் வரை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறை எதிர்பார்க் கப்பட்ட அளவுக்கு கட்டுப்படுத் தப்பட்டிருப்பதும் வளர்ச்சிக்கான காரணமாக இருக்கும் என் றும் மார்கன் ஸ்டான்லி குறிப் பிட்டுள்ளது.
நுகர்வோர் விலை பணவீக்கம் 4 சதவீதமாகவும், நிதிப் பற்றாக்குறை 2.5 சதவீதமாகவும் கட்டுக்குள் வைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பின் காரணமாக பேரியல் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் உள்ளன என அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
பருவ மழை எதிர்பார்த்தபடி இல்லையென்றால் பணவீக்க எதிர்பார்ப்பில் சிக்கல் உருவாகலாம். தவிர குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதன் மூலம் பணவீக்க எதிர்பார்ப்பில் மாற்றங்கள் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல்- ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சிக்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக உற்பத்தி துறையின் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வரும்பட்சத்தில் வளர்ச்சி சாத்தியமாகும்.
சர்வதேச பொருளாதார வளர்ச்சிகளில் ஏற்படும் மந்தமான சூழல், ஏற்றுமதி சந்தைகளில் நிலவும் தாக்கங்கள் காரணமாக வளர்ச்சிக்கான சூழல் மாறலாம் என்றும் மார்கன் ஸ்டான்லி சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இந்த விலையேற்றம் மேலும் அதிகரித்தால் அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்தை தொடும். அதுபோல பருவ மழை குறைந்தால் அதன் காரணமாக தனியார் முதலீடுகள் தாமதமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற சூழல்கள் வளர்ச்சியில் தாக் கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.